வியாழன், 25 பிப்ரவரி, 2010

காதல் தோல்வி

நாங்கள் காதலில்
தோல்வியுற்றுக் காதலிக்காகத்
தாஜ்மகால் கட்ட இயலாதவர்கள்!
“சார்மினாரை” உதட்டில் பொருத்தி
புகை வளையம் கட்டுபவர்கள்!
- யாரோ

காதல் (பழ)மொழிகள்!!!

கெட்டிக்காரப்பெண் தான்
காதலிப்பவனை விட்டுத்
தன்னைக் காதலிப்பாவனையே மணப்பாள் – சைல்ஷியா

காதலைத் தடுத்தல் அதைத்
தூண்டி விடுவதைப் போன்றது – பிரான்ஸ்

ஒருவன் சகோதரனைத் தேடிக்
கடல் வரை போவான்.
காதலியைத் தேடிக்
கடலுக்கு உள்ளேயும் போவான் – பல்கேரியா

காப்பியும் காதலும்
சூடாக இருந்தால் தான் ருசி – ஜெர்மனி

ஒரே பெண்ணையோ,ஒரே பஸ்சையோ
தொடர்ந்து ஓட வேண்டாம்.
பின்நாள் வேறு கிடைக்கும் – இத்தாலி

எனக்குப் பிடித்த கவிதை - 2

அன்புள்ளவளே!
நீ இங்கு நலம்!
நான் அங்கு நலமா?
- சுரதா

தமிழ் விடுதலை ஆகட்டும்

சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்
தலைமுறை ஒரு கோடி கண்ட - என்
தமிழ் விடுதலை ஆகட்டும்

பிறந்தேன் பிள்ளை யாருக்காக
பெற்றெடுத்த தமிழ் மொழிப் போருக்காக
உள்ளம் இருப்பதும் தோள் இருப்பதும்
உயிர் நிகர் தமிழ்ச் சீருக்காக

என் உயிர் போனால் போகட்டும்
என் புகழுடல் மட்டும் நிலைக்கட்டும்
தேனால் செய்த என் செந்தமிழ் தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்

-பாரதிதாசன்